முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு: இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில்
இரு பொலிஸ் அதிகாரிகள் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு
பிரிவில் இணைக்கப்பட்ட இரண்டு பொலிஸ் சார்ஜன்ட் அதிகாரிகள் தன்னிடம் ரூபா 25
000 இலஞ்சம் கோருவதாக அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவில் மணல்
விற்பனை மற்றும் போக்குவரத்து செயற்பாட்டில் ஈடுபடும் ஒருவர் கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
செய்திருந்தார்.

இதனடிப்படையில் ஆணைக்குழு அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய
சம்பவதினமான சனிக்கிழமை(21) அம்பாறை மணிக்கூட்டு கோபுரம் அருகில் D.C.D.B
என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவில் இணைக்கப்பட்ட
இரண்டு பொலிஸ் சார்ஜன்ட் அதிகாரிகள் கூறியமைக்கு அமைவாக இலஞ்சப் பணத்தை
மணல் விற்பனை செய்யும் நபர் வழங்கியுள்ளார்.

கைது

இதன்போது அங்கு மாறு வேடத்தில்
காத்திருந்த இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின்
அதிகாரிகள் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவில் இணைக்கப்பட்ட இரண்டு
பொலிஸ் சார்ஜன்ட் அதிகாரிகளை கைது செய்தனர்.

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு: இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது | Two Police Officers Arrested On Bribery Charges

மேலும் அம்பாறை மாவட்டம்
திருக்கோவில் பொலிஸ் பிரிவில் மணல் விற்பனை மற்றும் போக்குவரத்து
செயற்பாட்டில் ஈடுபடும் நபரிடம் இருந்து மணல் போக்குவரத்து தொழிலை எந்த
பிரச்சினையும் இல்லாமல் தொடரவும் அந்த தொழில் தொடர்பாக சட்டப்பூர்வமாக
செயல்படுவதைத் தவிர்க்கவும் சம்பந்தப்பட்ட இரண்டு அதிகாரிகளும் அந்த
நபரிடமிருந்து ரூபா 25000 இலஞ்சம் கோரியிருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையில்
இருந்து தெரிய வந்துள்ளது.

பின்னர் சம்மாந்தறை பொலிஸ் நிலையத்திற்கு இரு
சந்தேக நபர்களும் அழைத்து வரப்பட்டு விசாரணைகளின் பின்னர் சம்மாந்துறை
நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு
அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.