Courtesy: Sivaa Mayuri
இத்தாலியில் (Italy) சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர் ஒருவர் மற்றொரு இலங்கையரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதன் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலமுறை கத்தியால் குத்தி பலத்த காயங்களை ஏற்படுத்தியதன் காரணமாக குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.
41 வயதுடைய குறித்த நபரை காயமடைந்தவரின் முறைப்பாட்டுக்கமைய அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதி
மேலும், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 44 வயதான இலங்கையருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெண் ஒருவர் தொடர்பிலேயே இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கலாம் என அந்நாட்டு பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

