முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில நிதி குற்றவியல் புலனாய்வுப் பிரிவில் சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார்.
எனினும், அவர் முன்னிலையானதற்கான காரணங்கள் எதுவும் தெரியவரவில்லை.
விமலும் அழைப்பு
இதேவேளை, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவும் இன்று நிதி குற்றவியல் புலனாய்வுப் பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நிதியமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பான விசாரணைகளுக்காக அவர் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.