யாழ்.வடமராட்சி கிழக்கு தேசிய பாடசாலையான உடுத்துறை மகா வித்தியாலய நான்கு மாணவர்கள் 9Aசித்திகளை பெற்று வரலாறு சாதனை படைத்துள்ளனர்.
2024ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் அதிகாலை வெளியாகின.
சிறந்த பெறுபேறுகள் அதிகரிப்பு
அந்தவகையில், உடுத்துறை மகாவித்தியாலய மாணவர்கள் நான்கு பேர் 9A சித்திகளை
பெற்று பாடசாலைக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

Y.ரம்சிகா, s.கவிநிலா, u.கவியரசி மற்றும் T.குபேசன் ஆகிய
நான்கு மாணவர்களே 9ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதேவேளை v.இசைவானி மற்றும் A.சங்கவி ஆகியோர் 8ஏ சித்தி பெற்று
பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இவ்வரலாற்றுச் சாதனை தொடர்பாக பாடசாலை அதிபர் கருத்து தெரிவிக்கையில், கடந்த
ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த முறை மிகச் சிறந்த பெறுபேறுகள் அதிகரித்துள்ளன
எனவும் ஆனாலும் இந்த முறை சித்தியடையாத மாணவர்களின் எண்ணிக்கையும்
அதிகரித்துள்ளது என தனது கவலையினை வெளிப்படுத்தி உள்ளார்.
இனிவரும் காலத்தில்
100வீத சித்தியினை பாடசாலை அடைவதற்கு தாம் அனைவரும் பயணிப்பதாகவும் கூறியுள்ளார்.
பெறுபேறு பட்டியல்
மேலும் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் விண்ணப்பங்களை அனுப்புவதற்காக ஏற்கனவே
வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, அந்தந்தப்
பாடசாலையின் பரீட்சை பெறுபேறுகள் பட்டியலைப் பதிவிறக்கி, அச்சிடப்பட்ட
பிரதியைப் பெறுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம்
அறிவித்துள்ளது.

அனைத்து மாகாண மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களும் பயனர் பெயர் மற்றும்
கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, அனைத்துப் பாடசாலை விண்ணப்பதாரர்களின்
பெறுபேறுகளை பதிவிறக்கம் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், அனைத்துப் பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களும் தங்கள்
பரீட்சை இலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்வதன் மூலம்
பெறுபேறு பட்டியலைப் பதிவிறக்கம் செய்யவோ அல்லது பார்வையிடவோ வசதிகள்
வழங்கப்பட்டுள்ளன.

