முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். பல்கலைக்கழக சட்டபீடத்தின் சர்வதேச சட்ட ஆய்வு மாநாடு ஆரம்பம்

யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடானது, தற்போது யாழ் பல்கலைக்கத்தில் இடம்பெற்று வருகிறது.

யாழ். பல்கலைக்கழகச் சட்டத்துறை மற்றும், இந்தியாவின் சுரானா சர்வதேச வழக்கறிஞர் நிறுவனத்துடன் இணைந்து இரண்டாவது
தடவையாகவும் ‘முறை செய்’ என்ற தலைப்பில் குறித்த மாநாடு இடம்பெற்று வருகிறது.

இந்த மாநாடானது இன்றும் (25) நாளையும் (26)
நடைபெறவுள்ளது.

மாற்றத்திற்கான கருவி

மாற்றத்திற்கான கருவியாக சட்டம் என்னும் சாரப்பட
செயற்படல், நிலைமாற்றம் , நிலைத்திருப்பு என்னும் தொனிப்பொருளில் ஒழுங்கு
செய்யப்பட்டுள்ள இன்றைய மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் இலங்கை உயர்நீதிமன்ற
நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன பிரதம விருந்தினராகவும் , தகவல் உரிமை
ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான ஹிஷாலீ பின்டோ ஜெயவர்த்தன சிறப்பு
விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.

யாழ். பல்கலைக்கழக சட்டபீடத்தின் சர்வதேச சட்ட ஆய்வு மாநாடு ஆரம்பம் | Uoj Law Faculty S International Study Conference

முதல் நாள் நிகழ்வான இன்று ஆளுகை நிலைமாற்றம் தொடர்பில் சிங்கப்பூர் தேசிய
பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் டியான் ஷாவும், இலத்திரனியல் நிலைமாற்றம்
தொடர்பாக சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி சுனில் அபேரட்னவும் சிறப்புரைகளை
ஆற்றினர்.

அத்துடன் மற்றுமொரு சிறப்பம்சமாக மக்களின் அரசியலமைப்பு , அதன் எதிர்காலம்
என்னும் தலைப்பிலான சிறப்புக் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

சட்டத்துறையின் ஏற்பாாடு

அந்தக்
கலந்துரையாடலில் கொழும்புப் பல்கலைக்கழக சட்ட பீட முன்னாள் பேராசிரியர்
வீ.த.தமிழ்மாறன் , ஜனாதிபதி சட்டத்தரணி ஜெயந்தா டி அல்மெய்டா குணரட்ண,
பேராதனைப் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி கலன சேனாரட்ண ஆகியோர்
உரையாளர்களாகவும் மாற்றுக் கொள்கை நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் பவானி பொன்
சேகா உரையாளர் மற்றும் நெறியாளராகவும் பங்கு கொண்டனர்.

யாழ். பல்கலைக்கழக சட்டபீடத்தின் சர்வதேச சட்ட ஆய்வு மாநாடு ஆரம்பம் | Uoj Law Faculty S International Study Conference

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையின் ஏற்பாட்டில் ஆரம்பமாகிய இந்த
மாநாட்டுக்கு யாழ். பல்கலையின் சட்டத்துறை தலைவர் தலைவர் கோசலை மதன்
தலைமை தாங்கியதுடன், பிரதம அதிதியாக உச்ச நீதிமன்ற நீதிபதி கலந்து
சிறப்பித்ததுடன் நீதிபதிகள், யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி
பேராசிரியர் சி.ரகுராம், சட்டத்தரணிகள், விரிவுரையாளர்கள் மாணவர்கள் மற்றும்
கல்விமான்கள் என பலரும் கலந்துகொண்டனர். 

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.