முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொப் பிரான்சிஸுக்கு அமெரிக்கா வழங்கவுள்ள அங்கீகாரம்

அமெரிக்காவின் (US) உயரிய குடிமகன் ஒருவரை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் ஜனாதிபதி சுதந்திரப் பதக்கத்தை பொப் பிரான்சிஸுக்கு (Pope Francis) வழங்குவதற்கு ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) தீர்மானித்துள்ளார்.

அமைதி, மனித உரிமைகள் மற்றும் ஏழைகள் மீது பொப் பிரான்சிஸ் செலுத்தும் அக்கறை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றினை அங்கீகரித்தே இந்த விருதினை வழங்க அவர் முடிவு செய்துள்ளார். 

கடந்த ஜனவரி 11ஆம் திகதி அன்று இருவருக்கும் இடையே இடம்பெற்ற தொலைபேசி அழைப்பின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

தடைப்பட்ட சந்திப்பு… 

வத்திகானில் கடந்த 10 ஆம் திகதி மேற்கொள்ளவிருந்த சந்திப்பு, லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக இரத்து செய்யப்பட்டது. 

பொப் பிரான்சிஸுக்கு அமெரிக்கா வழங்கவுள்ள அங்கீகாரம் | Us Awards Pope Francis Presidential Medal Freedom

இதன் காரணமாக பைடன், வத்திகான் செல்வது தடைப்பட்டதையடுத்து பொப் பிரான்சிஸுடன் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டார். 

முன்னதாக, கடந்த டிசம்பர் 20ஆம் திகதி அன்று இடம்பெற்ற உரையாடலின் போது மனித உரிமைகள் மீது கவனம் செலுத்தப்பட்ட நிலையில், மரண தண்டனை கைதிகள் குறித்து பொப், தனது கவலைகளை வெளிப்படுத்தியிருந்தார். 

தொலைபேசி அழைப்பு 

இதன் பின்னர், பைடன் 37 நபர்களின் மரண தண்டனையை குறைத்து, நீதி மற்றும் இரக்கத்திற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்.

பொப் பிரான்சிஸுக்கு அமெரிக்கா வழங்கவுள்ள அங்கீகாரம் | Us Awards Pope Francis Presidential Medal Freedom

மேலும், இருவருக்கும் இடையில் இடம்பெற்ற குறித்த இரு கலந்துரையாடல்களின் போதும் மனித உரிமைகளை மேம்படுத்துவது குறித்தும் மத சுதந்திரத்தைப் பாதுகாப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பொப் பிரான்சின் மனிதாபிமான நோக்கம் மற்றும் செயல்களை அங்கீகரிக்கும் வகையில் ஜனாதிபதி சுதந்திரப் பதக்கத்தை வழங்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்