அமெரிக்காவில் டிக்டொக்கை (TikTok) தடை செய்யக்கூடிய சர்ச்சைக்குரிய முக்கிய யோசனைக்கு
அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது.
டிக்டொக்கின் சீன உரிமையாளரான பைட் டான்ஸிற்கு (ByteDance) அதன் பங்குகளை விற்க ஒன்பது
மாத அவகாசத்தை அளித்துள்ளதுடன், அமெரிக்காவில் அதன் பயன்பாட்டை தடுக்கும்
வழியையும் ஏற்படுத்தியுள்ளது.
வாகனங்களை வாங்குபவர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
ஆய்வாளர்கள்
இந்த யோசனை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் (Joe Biden) ஒப்படைக்கப்படவுள்ளதுடன் ஜனாதிபதி கையெழுத்திட்டவுடன் அது சட்டமாக்கப்படும் நிலையில், பைட் டான்ஸ் கட்டாய விற்பனையை முடிக்க சீன அதிகாரிகளிடம்
ஒப்புதல் பெற வேண்டும்.
எனினும் பீஜிங் இதனை எதிர்ப்பதாக அறிவித்துள்ளது.
எனவே இந்த செயல்முறை பல ஆண்டுகள் ஆகலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
உக்ரைன், இஸ்ரேல், தாய்வான் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள மற்ற
அமெரிக்க பங்காளிகளுக்கு இராணுவ உதவியை உள்ளடக்கிய நான்கு யோசனை தொகுப்பின்
ஒரு பகுதியாக இந்த யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு 79 செனட்டர்கள் ஆதரவாகவும் 18 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.
அறிவிப்பு
அமெரிக்காவில் மிகவும் பிரபலமான செயலிகளில் ஒன்றைக் கட்டுப்படுத்த, சீன
கம்யூனிஸ்ட் கட்சிக்கு பல ஆண்டுகளாக நாங்கள் கோரியிருந்தோம்.
ஏனெனில் அது ஆபத்தானது என்று புலனாய்வுக் குழுவின் உயர்மட்ட குடியரசுக்
கட்சியைச் சேர்ந்த செனட்டர் மார்கோ ரூபியோ ( Marco Rubio) கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த நடவடிக்கை குறித்து டிக்டொக் உடனடியாக பதிலளிக்கவில்லை.
எனினும் கடந்த வாரம், அந்த நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதில், இந்த யோசனை 170 மில்லியன் அமெரிக்கர்களின் பேச்சு சுதந்திரத்தையும் ஏழு மில்லியன் வணிகங்களை அழிக்கும்.
மேலும், அமெரிக்க
பொருளாதாரத்திற்கு ஆண்டுதோறும் 24 பில்லியன் டொலர் பங்களிக்கும் தளத்தை மூடும் என்றும் கூறியுள்ளது.
டிக்டொக்கின் தலைமை நிர்வாகி ஷௌ ஜி செவ் (Shou Zi Chew), தனது நிறுவனம் சட்டப்பூர்வ
உரிமைகளை பயன்படுத்தி தளத்தை பாதுகாப்பது உட்பட அனைத்தையும் செய்யும் என்றும் கூறியுள்ளார்.
மலையக மக்களை இலங்கையின் அர்த்தமுள்ள குடிகளாக்கும் பொறுப்பு பிரிட்டனுக்கு உண்டு: திலகர்
மத்தள சர்வதேச விமான நிலையத்தை தனியாருக்கு கையளிக்க நடவடிக்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |