அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் சீனா, இந்தியா, இலங்கை மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ஏற்றுமதிப் பொருட்கள் மீது வரிகளை விதித்துள்ளார்.
இலங்கை பொருட்கள் மீது 44 சதவீதம் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரிகளை அறிவித்ததன் பின்னர், அமெரிக்க பங்குச்சந்தை கடுமையான சரிவை சந்தித்துள்ளது.
உலக பொருளாதார ஒழுங்கை சவால் விடுகின்ற வகையில் தான் ட்ரம்பினுடைய அறிவிப்பு வெளியாகியுள்ளது என்று
கனடாவிலிருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் மேலும் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு…