சீனாவின் சில இறக்குமதிப் பொருட்களுக்கு இன்று இரவு முதல் 104% வரியை விதிப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சீனாவின் இறக்குமதிகளுக்கு அமெரிக்கா விதித்த வரியை அடுத்து, அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரியை விதித்தது.
குறித்த வரியை உடனே திரும்பப் பெறாவிட்டால் சீனா மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.
பொருளாதார மந்த நிலை
இந்நிலையில், வரியை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை சீனா எடுக்காததால் அந்நாட்டின் சில பொருட்கள் மீது அமெரிக்கா 104 சதவீத வரியை விதித்துள்ளது.
இதேவேளை, கடுமையான வீழ்ச்சியை சந்தித்த அமெரிக்காவின் பங்குச்சந்தை இன்று சிறிது வழமைக்கு திரும்பியுள்ளது.
ட்ரம்ப்பின் புதிய வரிக் கொள்கைகளை சில அமெரிக்கர்கள் ஆதரிக்கும் போதிலும் சிலர் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சுகின்றனர்.