சீனாவைச் சேர்ந்த ஹெக்கர் ஒருவர் குறித்து தகவல்கள் வழங்குவதற்கு சுமார் 85 கோடி ரூபாய் பரிசினை அமெரிக்கா அறிவித்துள்ளது.
2020இல் உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான நிறுவனங்களின் பாதுகாப்பு அமைப்புகளை ஊடுறுவி, இந்த ஹெக்கர் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க நிதியமைச்சகம், இந்த இணைய மோசடி தாக்குதல் பலரின் உயிரை பறித்திருக்கலாம் என்று கருதுகிறது.
இணைய மோசடி
அத்துடன் இந்த தாக்குதல், முக்கியமாக எரிசக்தி நிறுவனங்களை குறிவைத்து நடத்தப்பட்டதால், பெரும் அளவில் உயிரிழப்புக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
செங்டுவை தளமாகக் கொண்ட சிச்சுவான் சைலன்ஸ் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி நிறுவனம் மற்றும் அதன் ஊழியர் குவான் தியான்ஃபெங் ஆகியோர் இந்த தாக்குதலுக்குப் பின்னால் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.
மேலும், இந்த இருவரும், 80,000க்கும் மேற்பட்ட ஃபயர்வால்களை உடைக்கக் கூடிய ஆபத்தான மென்பொருளை உருவாக்கி பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையிலேயே, குறித்த இணைய மோசடி குற்றவாளியை பிடிப்பதற்கு உதவுபவர்களுக்கு 01 கோடி டொலரை பரிசாக அமெரிக்கா அறிவித்துள்ளது.