முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வேடனின் தீப்பொறியால் வீரியம் பெறும் ஈழம் – இந்திய அடக்குமுறைக்குள் மற்றுமொரு புரட்சியாளன்

சமகால இணையப் பரப்பில் வேடன் என்ற ஒரு ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கேரள இளைஞன் அனைவரது கவனத்தையும் பெற்று பரவலாக பேசப்பட்டு வருகின்றார்.

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட  இந்த கேரளத்து இளைஞன் மிகச்சிறந்த சொல்லிசைப் பாடகராக தன்னை நிலைநிறுத்தி வருகின்றார்.

அண்மையில், இவருடைய பாடல் வரிகள் சில இணையத்தில் மிக அதிகமாக பகிரப்பட்டு பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.  

அதில், “தன்னைப் பெற்ற தாய், யாழ்ப்பாணத்தின் போர்ச் சூழல், யாழில் இருந்து போரினால் விரட்டியடிக்கப்பட்ட துயரம், வீரம் விளைந்த மண் ஈன்ற தாயின் வயிற்றில் பிறந்த தான் ஒரு எரிக்கும் தீ..!!” என்று அவர் மொழிந்த இந்த கவி வரிகள் இன்று உலகம் பூராகவும் அதிக பகிர்வுகளையும், பார்வைகளையும் பெற்றுள்ளதுடன் உலகவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

கிரண்தாஸ் முரளி

உண்மையில் இந்த இளைஞனின் பெயர் வேடன் அல்ல,  உண்மையான பெயர்  கிரண்தாஸ் முரளி.  இவருடைய அன்னை ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இலங்கையின் போர்ச்சூழல் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவிற்கு குடிபெயர வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்படுகின்றார். 

இந்தியாவிற்கு குடிபெயர்ந்த வேடனின் தாயார், திருச்சியில் வைத்து கேரளத்தைச் சேரந்த ஒருவருடன் காதல் வயப்பட்டு அவரை திருமணமும் செய்து கொண்டு, திருச்சி, மதுரை என்று குடிபெயர்ந்து பின்னர் கேரளத்திற்குச் செல்கின்றனர். 

மிகவும் வறுமையான வாழ்க்கைதான், மிகச் சாதாரணமான குடிசை அமைத்து வாழ்ந்து வரும் அந்த தம்பதியினருக்கு இரண்டாவதாக பிறந்த மகன் தான் இந்த வேடன் என்று அழைக்கப்படும் கிரண்தாஸ் முரளி. 

தன்னுடைய, பாடசாலை நேரங்கள் தவிர்த்து ஏனைய பொழுதுகளில் தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஏரிக்குச் சென்று, வேடன் போல அம்பு செய்து மீன்பிடி உள்ளிட்ட சில செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார் இந்த கிரண்தாஸ் முரளி.

இதனையடுத்து பாடசாலையில் பலரும் இந்தச் சிறுவனை வேடன் என்று சொல்லி கிண்டலடிக்கும் போக்கு அதிகமாக காணப்பட்டு பின்னர் அதுவே அவரது பெயராகவும் நிலைப்பெறுகின்றது. 

எனினும், வாழ்க்கைச் சூழல் மாற பள்ளிப் படிப்பை இடைநடுவில் கைவிட்டு, கூலித்தொழிலை நாடிச் செல்கின்றார் இவர்.

இதற்கு பின்னரான நாட்களில் கேரளாவில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு, இவர்கள் வாழ்ந்த திரிச்சூர் பகுதி அதிக பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது. 

வாழ்க்கையில் திருப்புமுனை

இந்தசமயம், தனியார் நிறுவனம் ஒன்றில் இணைந்து தன்னார்வ தொண்டு செய்ய முயன்ற இளைஞனை, நிறம் உள்ளிட்டவற்றை காரணம் காட்டி நிராகரிக்கின்றனர்.   தொண்டு செய்வதற்கு கூட நிறம், குலம் என்ற காரணங்களால் ஒடுக்கப்படுகின்றார் இந்த வேடன். 

இந்த ஒரு சம்பவம் மாத்திரம் அல்ல,  இது போன்ற சாதி மற்றும் நிற ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் வேடனுக்கு பாரிய அதிருப்தி நிலை தோன்றவே தான் அனுபவித்த இந்த ஒடுக்குமுறைகளை பாடலாக எழுதி வந்துள்ளார். 

இந்த பாடல்களை வெளிப்படுத்த களம் ஒன்றிற்காக காத்திருந்த வேடன், கேரளாவில் நடைபெற்ற ஒரு போராட்டத்தின் போது தானாக முன்வந்து தன்னுடைய பாடல்களை பலருக்கு மத்தியில் அரங்கேற்றுகின்றார்.  

அந்த தருணம்தான் இந்த இளைஞனின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைகின்றது. 

வேடனின் தீப்பொறியால் வீரியம் பெறும் ஈழம் - இந்திய அடக்குமுறைக்குள் மற்றுமொரு புரட்சியாளன் | Vedan Tamil Singer Rapper Vedan Songs

தாய் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், இயல்பிலேயே இருந்த ஒரு போராட்டக் குணம் அந்த இளைஞனை ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒரு  வேடனாக மாற்றுகின்றது.

இன்று கேரளாவில் மாத்திரம் அல்லாமல் உலக வாழ் மக்கள் பலரது கவனத்தை ஈர்த்த ஒரு பாடகனாகவும் உருவாகியிருக்கின்ற வேடன், 2020ஆம் ஆண்டு தனது முதலாவது பாடல் அல்பத்தை வெளியிட்டார்.  இதனையடுத்து ஒடுக்கப்பட்டவர்களுக்கான பாடல்களை வெளியிட்டுள்ள வேடன் திரைத்துறையிலும் பிரவேசித்தார். அவரது பாடல்களுக்கு மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்தது.

2021ஆம் ஆண்டு காலப்பகுதியில், வேடனுடைய தாய் உயிரிழந்துள்ளார். இந்தநிலையில், தன்னுடைய தாய் தொடர்பில் அவர் வெளியிட்ட, “என்னைப் பெற்றவள் கல்லுபோல் ஒருத்தி, அவளை ஜாப்னாவில் இருந்து யாரோ துறத்தி, அவள் உதிரத்தில் உருவம் கொண்டது பருத்தி அல்ல, எரிக்கும் தீ.. என்ற வரிகள் இன்று பலரை வியந்து பார்க்க வைத்துள்ளது.

குறிப்பாக வேடனின் பாடல் வரிகள் புரட்சிகரமானதாகவும், அதிர்வுகளை ஏற்படுத்துவதகாவும் அமைந்துள்ளமை மக்களை விரைவாகச் சென்றடைவதற்கு வழிவகுப்பதுடன்,  சாதிய, நிற ஒடுக்குமுறைகளுக்கு எதிரான வலுவான குரலாகவும் காணப்படுகின்றது…

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.