முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியாவில் இடம்பெற்ற வன்முறை: பிரதேச சபை உறுப்பினர் உட்பட இருவர் கைது

வவுனியா – கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் உட்பட இருவர் இன்று(14.07) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு வவுனியா, கூமாங்குளம் பகுதியில் மோட்டர் சைக்கிளில்
சென்ற நபர் ஒருவர் வீதியில் விழுந்து மரணமடைந்திருந்தார்.

இதன்போது, அப்பகுதியில் பயணித்த போக்குவரத்து பொலிஸாரே குறித்த மரணத்திற்கு காரணம் என
தெரிவித்த ஒரு குழுவினர் குழப்பத்தில் ஈடுபட்டதுடன், பொலிஸார் மீதும்
தாக்குதல் மேற்கொண்டனர்.

மாரடைப்பு 

மரணம் தொடர்பில் விசாரணை செய்ய சென்ற பொலிஸார் மீது அப்பகுதியில் குழுமி
இருந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 5 பொலிஸார் காயமடைந்ததுடன்,
பொலிஸாரின் இரு மோட்டர் சைக்கிள்கள் மற்றும் கப் ரக வாகனம் ஒன்றும்
சேதமாக்கப்பட்டது.

வவுனியாவில் இடம்பெற்ற வன்முறை: பிரதேச சபை உறுப்பினர் உட்பட இருவர் கைது | Violence In Vavuniya Two Arrested

இந்நிலையில், மரணித்தவர் மாரடைப்பு காரணமாக மரணித்ததாக சட்ட வைத்திய
அதிகாரியின் அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில்
விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார், வாக்கு மூலம்
பெறுவதற்காக இருவரை அழைத்திருந்தனர்.

நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை

குறித்த இருவரிடமும் வாக்கு மூலம் பெற்ற பின்னர் அரச சொத்துக்களை
சேதப்படுத்தியமை, மக்களை ஒன்று கூட்டியமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறை
ஏற்படுத்தியமை, இறப்புக்கு காரணமாக இருந்தமை உள்ளிடட பல்வேறு
குற்றச்சாட்டுக்களின் கீழ் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் இடம்பெற்ற வன்முறை: பிரதேச சபை உறுப்பினர் உட்பட இருவர் கைது | Violence In Vavuniya Two Arrested

கைது செய்யப்பட்டவர்களில ஒருவர் தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா தெற்கு
தமிழ் பிரதேச சபை உறுப்பினர் ஆவார்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த
இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார்
மேலும் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்