முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடக்கை உலுக்கும் மர்மக் காய்ச்சல் : மேலும் ஒருவர் உயிரிழப்பு

மர்மக் காய்ச்சல் பாதிப்புடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை
பெற்று வந்த பருத்தித்துறையைச் சேர்ந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர் மர்மக் காய்ச்சல் பாதிப்புடன் பருத்தித்துறை – மந்திகை ஆதார
வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் நேற்று (11) உயிரிழந்துள்ளார்.

40 பேர் மர்மக் காய்ச்சல் காரணமாக சிகிச்சை

பருத்தித்துறையைச் சேர்ந்த ஆனந்தகுமார் (வயது47) என்ற நபரே சிகிச்சை பலனின்றி
உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து வடக்கு மாகாணத்தில் இதுவரை மர்மக் காய்ச்சலுக்குப் பலியானவர்களின்
எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. 

நேற்று உயிரிழந்த பருத்தித்துறையைச் சேர்ந்த நபரின் மாதிரிகளும் கொழும்புக்கு
அனுப்பப்பட்டுள்ள நிலையில், அறிக்கைகள் கிடைத்த பின்னரே இறப்புக்கான காரணம்
என்ன என்பது தொடர்பில் உறுதியாகத் தெரியவரும்.

இதேவேளை, மர்மக் காய்ச்சல் அறிகுறிகளுடனும், சடுதியான சுகவீனத்துடனும் வடக்கு
வைத்தியசாலைகளை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

வடக்கை உலுக்கும் மர்மக் காய்ச்சல் : மேலும் ஒருவர் உயிரிழப்பு | Viral Fever In Northern Province Another Death

பருத்தித்துறை –
மந்திகை ஆதார வைத்தியசாலையில் மட்டும் இதுவரை 40 பேர் மர்மக் காய்ச்சல்
காரணமாக சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரின் உடல்நிலை
தொடர்பிலும் தீவிரமான கண்காணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காய்ச்சல் மற்றும் சடுதியான சுகவீனம்

சிலரின்
உடல்நிலை சடுதியாகப் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

“அண்மையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பேரிடரால், எலிக் காய்ச்சல்
பரவக்கூடிய சாத்தியங்கள் உள்ளன.

வடக்கை உலுக்கும் மர்மக் காய்ச்சல் : மேலும் ஒருவர் உயிரிழப்பு | Viral Fever In Northern Province Another Death

அத்துடன், வேறுசில விலங்குகளின்
மலத்தொற்றாலும் இவ்வாறான நோய்நிலை ஏற்படும் சாத்தியங்கள் உள்ளன.

எனவே,
பொதுமக்கள் தமது சுகாதாரம், குடிதண்ணீர் ஆரோக்கியம் என்பவற்றில் மிகுந்த
அவதானத்துடன் இருக்க வேண்டும்.

திடீர் காய்ச்சல் மற்றும் சடுதியான சுகவீனம்
ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாட வேண்டும்”  என்று சுகாதாரத்துறையினர்
அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

இலங்கையில் எலிக்காய்ச்சல் 

இதேவேளை, இலங்கையில் எலிக்காய்ச்சல் காரணமாக இந்த வருடத்தில் இதுவரை 10 ஆயிரத்துக்கும்
அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கை உலுக்கும் மர்மக் காய்ச்சல் : மேலும் ஒருவர் உயிரிழப்பு | Viral Fever In Northern Province Another Death

தொற்று நோய்த் தடுப்புப் பிரிவின் விசேட வைத்தியர் குமுது வீரக்கோன் இதனைத்
தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் எலிக்காய்ச்சல் நோயாளர்களின்
எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் மேலும்
குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.