வத்தளை – ஹேகித்த பகுதியில், அடையாளம் தெரியாத நால்வரால் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு, பொதுமகன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு(19) பதிவாகியுள்ளது.
முதற்கட்ட விசாரணையில்..
சம்பவத்தில் உயிரிழந்தவர் வத்தளை, ஹேகித்த பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு, மஹபாகே பொரிஸ் பிரிவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு உதவி புரிந்தவர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




