முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெலிகம பிரதேச சபை தலைவர் விவகாரம்: சந்தேகநபர் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி பாதுகாப்புப் படையிலிருந்து தப்பிச் சென்றவர் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் சிகிச்சை பலனின்றி 22ஆம் திகதி உயிரிழந்தார்.

 துப்பாக்கிதாரி 

லசந்த விக்ரமசேகரின் உடல் மிதிகமையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

வெலிகம பிரதேச சபை தலைவர் விவகாரம்: சந்தேகநபர் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் | Weligama Pradeshiya Sabha Chairman Murder

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையிலே துப்பாக்கிதாரி பாதுகாப்புப் படையிலிருந்து தப்பிச் சென்றவர் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லசந்த விக்ரமசேகரவின் கொலை

அதன்படி, 4 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 2 குழுக்கள் சி.சி.டி.வி (CCTV) கெமராக்களை பரிசோதிப்பதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிகம பிரதேச சபை தலைவர் விவகாரம்: சந்தேகநபர் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் | Weligama Pradeshiya Sabha Chairman Murder

இதேவேளை, இன்று (24) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக தொலைபேசி தரவுகள் மூலமாகவும் விசாரணைகள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் மரணத்திற்கானதுப்பாக்கியால் சுடப்பட்டதால் தலை மற்றும் மார்பின் உள் உறுப்புகளில் ஏற்பட்ட பலத்த காயங்கள் தான் என பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.