அனுராதபுரம் ஸ்ரவஸ்திபுராவின் திபிரிகடவலவில் உள்ள கோவிலொன்றுக்கு அருகிலுள்ள ஒரு நிலத்தில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரின் மனைவி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 8 பேரும் நேற்றையதினம்(14) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
கடந்த 13ஆம் திகதி, ஸ்ரவஸ்திபுராவின் திபிரிகடவலவில் உள்ள ராத்ரங் கோவிலுக்கு அருகிலுள்ள ஒரு நிலத்தில் குழுவொன்று புதையல் தேடுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
விசாரணை
அதன்படி, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், ஒரு பெண் உட்பட 8 பேரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குழுவில் இருந்த பெண்ணை விசாரித்த போது, அவர் பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரின் மனைவி என்பது தெரியவந்துள்ளது.

