Courtesy: Sivaa Mayuri
இந்திய நிதி உதவியுடன் திருகோணமலை சம்பூரில் 120 மெகாவோட் திறன் கொண்ட காற்றாலை மின்சார நிலையம் அமைக்கப்படவுள்ளது.
இந்திய மத்திய மின்சார ஆணையம் மற்றும் இலங்கை மின்சார சபைகளுக்கு இடையேயான கூட்டு முயற்சியாக இந்தத் திட்டம் இருக்கும்.
2024 டிசம்பர் 15 முதல் 17 வரை திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்தியாவிற்கான அதிகாரப்பூர்வ விஜயத்தை முடித்த பின்னர், இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று எரிசக்தி அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அதானியின் முதலீட்டில், வடக்கின் பூநகரி மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் காற்றாலை மின்சாரத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
எதிர்ப்பு நிலைப்பாடு
எனினும், இதில், இயற்கையின் அழிவு என்ற காரணத்தை முன்வைத்து மன்னார் திட்டத்துக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றாடல் துறை ஆர்வலர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் எதிர்ப்பு நிலைப்பாட்டை கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.