கொழும்பு – ராகம பகுதியில் பெண்ணொருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கழுத்தறுக்கப்பட்ட பின்னர், தீ வைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் கணவன் வேலைக்காக வெளியில் சென்ற வேளை, கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகள்
இதனையடுத்து, வீடு திரும்பிய கணவன் அதிர்ச்சியடைந்த நிலையில், பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர் 76 வயதுடையவர் எனவும் அவர் கணவருடன் தனது வீட்டில் வசித்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
அவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.