இந்தியாவில் (India) நடுவானில் பயணித்துக் கொண்டிருந்த விமானத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மும்பையிலிருந்து வாரணாசி நோக்கி பயணித்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்திலேயே பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து விமானம் மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள சிக்கல்தானா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
சம்பவம் தொடர்பில் நேற்று விமான நிலைய அதிகாரி தெரிவிக்கையில், “உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரைச் சேர்ந்த 89 வயதான சுஷிலா தேவி என அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண்மணி, ஞாயிற்றுக்கிழமை இரவு விமானப் பயணத்தின் போது உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.
அவருக்கு உதவ பணியாளர்கள் குழுவினர் முயற்சித்த போதிலும், அருகிலுள்ள விமான நிலையத்திற்கு விரைவாக திருப்பி விடப்பட்ட போதிலும், அவருக்கு மருத்துவ உதவி வழங்கப்படுவதற்கு முன்பே நிலைமை ஆபத்தானதாக மாறியது.
மருத்துவக் குழு பரிசோதனை
மருத்துவ அவசரநிலை காரணமாக இரவு 10 மணியளவில் விமானம் சிக்கல்தானா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
தரையிறங்கும் போது மருத்துவக் குழு அந்தப் பெண்ணை பரிசோதித்தது, ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து விமானம் வாரணாசிக்கு அதன் அடுத்த பயணத்திற்காகச் சென்றது” என அவர் தெரிவித்துள்ளார்.