நாட்டில் 5 முதல் 13 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவர்கள், 2024 ஆம் ஆண்டுக்கான தபால் தலை கண்காட்சி போட்டியில் பங்குபற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு உலக தபால் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களின் பங்குபற்றுதலுடன் தபால் தலை கண்காட்சி போட்டியை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலதிக தகவல்கள்
இந்த முத்திரை கண்காட்சி கல்வி அமைச்சின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியின் நிபந்தனைகள் மற்றும் இதர விபரங்களுக்கு, 011 23 26 163 என்ற தொலைபேசி எண்ணையும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும், www.slpost.gov.lk மற்றும் www.stamps.gov.lk என்ற முகவரியிலும் தொடர்புக்கொண்டு தெரிந்துகொள்ள முடியும்.
மேலும் www. facebook.com/PhilatelicBureauSriLanka என்ற முகநூல் பக்கத்தின் ஊடாகவும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என தபால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.