அறிமுகப் போட்டி என்பது எந்த விளையாட்டு வீரரும் ஒருபோதும் மறக்க முடியாத தருணம். அந்த அறிமுகப் போட்டியிலேயே அவர் உலக சாதனை படைக்க முடிந்தால், அது ஒரு அழியாத நினைவாக இருக்கும்.
இதன்படி நேற்று(10) லாகூரில் நியூசிலாந்துக்கு(new zealand) எதிரான தனது அறிமுகப் போட்டியில் 150 ஓட்டங்கள் எடுத்து தென்னாபிரிக்காவின்(south africa) மேத்யூ பிரீட்ஸ்கி முதல் ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் ஆனார்.
முறியடிக்கப்பட்ட சாதனை
1978ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டவீரர் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ், தனது முதல் இனிங்ஸில் 148 ஓட்டங்கள் எடுத்த 46 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.

இதுதவிர இப்போட்டியில் மேத்யூ பிரீட்ஸ்கி 150 ஓட்டங்களைச் சேர்த்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார்.

