உலகின் மிக உயரமான தொடருந்து இரும்பு வளைவுப் பாலத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra modi) திறந்து வைத்துள்ளார்.
இந்த பாலம் இன்று (06.06.2025) ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தின் செனாப் நதியின் குறுக்கே 359 மீற்றர் உயரத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
1315 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம் நில அதிர்வு மற்றும் காற்று சக்திகளைத் தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு
அத்துடன், 120 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட இந்த பாலத்தில் தொடருந்துகள் மணிக்கு 100 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

உலகின் மிக உயரமான செனாப் பாலம் ஜெர்மன் நிறுவனமான லியோன்ஹார்ட் ஆண்ட்ரா அண்ட் பார்ட்னர் பால வளைவுகளை வடிவமைத்தல் மற்றும் வியன்னா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின் இந்திய பிரதமர் முதல் முறையாக காஷ்மீர் சென்றுள்ளதால் வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

