கொழும்பு- கொம்பனித் தெருவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட மோதலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்சவுடன் (Yoshitha Rajapaksa) வந்த சந்தேகநபர்கள் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பிலுள்ள விடுதிக்கு சென்ற யோசித ராஜபக்ச, அவரது மனைவி உள்ளிட்ட குழுவினர் குழப்பம் விளைவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விடுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலை யோசித தரப்பு ஏற்க மறுத்தமையினால் முறுகல் நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகள்
இந்தநிலையில், யோஷித ராஜபக்சவுடன் வந்த ஒரு குழுவிற்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தின் சந்தேக நபர்கள் தெஹிவளை, அத்திடிய மற்றும் திம்பிரிகஸ்யாய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சந்தேக நபர்கள் தற்போது அந்தப் பகுதியை விட்டு தப்பிச் சென்றுவிட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.