முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் தவறவிடப்பட்ட தங்க நகையை ஒப்படைத்தவர் கட்டிவைத்து தாக்குதல்

யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் உணவு வாங்க வந்தவ சிறுதொழிலாளி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சிறுதொழிலாளி நிலத்தில் விழுந்துகிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து
வெதுப்பகத்தில் வழங்கிய நிலையில், அது தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ள வந்த சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். 

 குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் கருத்து தெரிவிக்கையில்,

உரும்பிராய் பகுதி

“உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றுக்கு சென்ற நிலையில்
நிலத்தில் தங்க நகை போன்ற ஆபரணம் இருப்பதை அவதானித்தேன்.

அதனை குறித்த வெதுப்பகத்தில் ஒப்படைத்ததுடன் அது தங்க ஆபரணமா என ஆராய்ந்து
உரியவர்களிடம் ஒப்படையுங்கள் என கடந்த 24ஆம் திகதி வழங்கினேன்.

யாழில் தவறவிடப்பட்ட தங்க நகையை ஒப்படைத்தவர் கட்டிவைத்து தாக்குதல் | Young People Tied Up And Attacked Incident Jaffna

இரண்டு நாட்கள் கடந்த நிலையில் குறித்த வீதியில் செல்லும்போது குறித்த
வெதுப்பகத்திற்கு சென்று நான் வழங்கிய ஆபரணத்தை உரியவரிடம் ஒப்படைத்தீர்களான
கேட்டேன்.

அதற்கு அவர்கள் இன்னும் உரியவர்களிடம் ஒப்படைக்கவில்லை என கூறினர்.

மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து குறித்த வெதுப்பகத்துக்கு சென்ற நிலையில்
அந்தப் பொருளை உரியவர்களிடம் ஒப்படைத்தீர்களா என கேட்டேன்.

ஒப்படைக்கவில்லை என பதில் வழங்கினர்.

இந்நிலையில் குறித்த பொருளைத் தாருங்கள் ஏதாவது சிறுவர் இல்லத்திற்கு அதை
வழங்கி வைப்போம் என கோரினேன்.

இதன்போது வெதுப்பகத்தில் நின்ற இருவர் என் கழுத்தைப் பிடித்து
தாக்கினர்.

நான் சொல்வதை கேளுங்கள் ஏன் தாக்குகிறீர்கள் என கத்தினேன்.

கம்பத்தில் கட்டிவைத்து தாக்குதல்

ஐந்துக்கு
மேற்பட்டவர்கள் என்னை தாக்கியதுடன் கம்பத்தில் கட்டிவைத்து தாக்குதலை முன்னெடுத்தனர்.

யாழில் தவறவிடப்பட்ட தங்க நகையை ஒப்படைத்தவர் கட்டிவைத்து தாக்குதல் | Young People Tied Up And Attacked Incident Jaffna

தாவீதியால் சென்ற சிலர் என்னை தாக்குவதை அவதானித்த நிலையில் எனது நியாயத்தை
கேட்டு என்னை மீட்டனர்.

முகத்திலும் உடலிலும் அடி காயங்களுக்கு உள்ளாகிய நான் கோப்பாய் பொலிஸாருக்கு
சம்பவம் தொடர்பில் தெரிவித்து வைத்தியசாலைக்கு சென்றுவிட்டேன்.

வைத்திய சாலையில் இருந்து வீடு திரும்பியபின் கோப்பாய் பொலிஸ் நிலையம்
சென்றேன் என்னை தாக்கியவர்களை பொலிஸார் கைது செய்யவில்லை.

பொலிஸ் நிலையம் வந்த
சட்டத்தரணி ஒருவர் சமாதானமாக செல்லுங்கள் என்றார்.

எனக்கு நியாயம் வேண்டும் என்னை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.