யாழ்ப்பாணம்(Jaffna) – வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை சுழிபுரம், காட்டுப்புலம் பகுதியில் இன்று(24.03.2025) இடம்பெற்றுள்ளது.
வட்டுக்கோட்டை காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் 26 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து கசிப்பு போத்தல் ஒன்று கைப்பற்றப்பட்டதுடன் வட்டுக்கோட்டை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றனர்.