பதுளையில் (Badulla) ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (25) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, 24 வயதுடைய சுவினிதகம பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது
நேற்று இரவு பதுளை பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது பதுளை நகரில்
சந்தேகத்துக்கிடமான நபர் ஒருவரைச் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதன்போது மேற்படி நபர் சூட்சுமமான முறையில் தன் கைவசம் மறைத்து வைத்திருந்த
5400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளைக் கைப்பற்றியுள்ளதாகப் பதுளை பொலிஸார்
குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் ,சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் அவரைப் பதுளை நீதிவான்
நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.