வவுனியா (Vavuniya) – பரசங்குளத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர்
ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து இன்று (27) இடம்பெற்றுள்ளதாக புளியங்குளம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
திருகோணமலையில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள்
பரசங்குளம் பகுதியில் நிலைதடுமாறி மின்சார கம்பத்தில் மோதி
விபத்துக்குள்ளாகியுள்ளது.
மோட்டார் சைக்கிள் சாரதி
இவ்விபத்தில் குறித்த மோட்டார் சைக்கிள் சாரதியான கிளிநொச்சி – பாரதிபுரத்தை
சேர்ந்த 23 வயதுடைய ஜெயசீலன் திவாகரன் என்ற இளைஞரே பலியாகியுள்ளார்.

விபத்தில் உயிரிழந்த இளைஞனின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக
விசாரணைகளை புளியங்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

