சீனாவில்(China) 10G சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமையானது தற்போது உலக கவனத்தை ஈர்த்துள்ளது.
ஹெபெய் மாகாணத்தின் சியோங்கான் நியூ என்ற பகுதியில் சீனாவின் முதல் 10G ஸ்டேண்டர்ட் பிரொட்பேண்ட் இணைய சேவையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
10G சேவை
ஹூவாய் (Huawei) தொழில்நுட்ப நிறுவனம், சீனா யூனிகாம் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து, இந்த 10G சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது வரை இந்த தொழில்நுட்பம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில், இணைய சேவையில் உண்மையான பதிவிறக்க வேகம் 9834 Mbps ஐ எட்டியது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இதன் பதிவேற்ற வேகம் 1008 Mbps ஆக இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் 5G சேவையே தற்போது தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சீனாவில் 10G சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமையானது கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.