நாட்டின் சிறைச்சாலைகளில் அடைக்கப்படக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை 11,000 என்ற போதிலும் தற்போது 29,800 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை சுமார் பதினெட்டாயிரத்தால் அதிகரித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கைதிகளின் நெரிசல் காரணமாக
சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசல் காரணமாக கைதிகள் பலர் மாறி மாறி உறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கையில்,
இந்த கடுமையான நிலைக்கு மாற்றாக கொழும்பு சிறைச்சாலைகளில் உள்ள சில கைதிகள் ஹொரணை பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பூசா கைதிகள் பல்லசேன முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.
வெளிநாட்டில் இடம்பெற்ற கொலை : தேடப்பட்டு வந்த இலங்கையர் ஜேர்மனியில் கைது!
இடம்மாற்றப்படும் கைதிகள்
கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் சுமார் 670 கைதிகளை அடைத்து வைக்க முடியும் எனவும், தற்போது 2000க்கும் அதிகமான கைதிகள் அங்கு இருப்பதாகவும் சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலையில் 300 கைதிகள் இருக்க முடியும் ஆனால் 2000க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.
மஹர சிறைச்சாலைகளில் 670 கைதிகளுக்கான வசதிகள் இருந்த போதிலும் 2500க்கும் மேற்பட்ட கைதிகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இறந்தவரை வங்கிக்கு அழைத்து வந்து கடன்பெறமுயன்ற பெண் : வைரலாகும் காணொளி
காலி சிறைச்சாலையில் 270 கைதிகள் உள்ள போதிலும் 1100 கைதிகள் இருப்பதாக காலி சிறைச்சாலை தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |