300 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் (Jaffna) – வல்வெட்டித்துறையில் நேற்று (31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கையில் உள்ள அனைத்து இனங்களின் கலாசாரங்கள், பாரம்பரியங்கள் மற்றும் விழுமியங்களை குறிக்கும் வகையில் ஒக்டோபர் மாதம் விசேட தினமொன்று அறிவிக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பிரமாண்டமான தேசிய விழா
தமிழர்கள், சிங்களவர்கள், பௌத்தர்கள், கத்தோலிக்கர்கள் மற்றும் முஸ்லிம்கள் என நாம் அனைவரும் ஒன்றாகக் கொண்டாடும் ஒரு நாள் நமக்கு வேண்டாமா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்த அனைத்து சமூகங்களின் கலாசாரங்கள், உணவு முறைகள், வாழ்க்கை முறைகள், ஆடை பாணிகள் மற்றும் இசை ஆகியவற்றை ஒன்றிணைத்து, ஒக்டோபரில் ஒரு பிரமாண்டமான தேசிய விழாவை நடத்த திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்.
யுத்தம் செய்ய அனுமதிக்க மாட்டோம்
நாம் பிரிந்திருந்தாலும் நம் குழந்தைகளை பிரிந்து இருப்பதற்கு இடமளிப்பது நல்லதல்ல. எங்கள் தலைமுறை யுத்தம் செய்ததிற்கு, எங்கள் குழந்தைகளின் தலைமுறை யுத்தம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என குறிப்பிட்டார்.
வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கின் அனைத்து குழந்தைகளும் ஒன்று சேரும் அரசாங்கமாக இந்த அரசாங்கத்தை நாங்கள் மாற்றுவோம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/gsU1aDdNxug