நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் விஜய் தனது கடைசி படமான தளபதி 69ல் நடித்து வருகிறார். அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால், சினிமாவிலிருந்து விலகுகிறார் விஜய்.
சமீபகாலமாக மற்ற திரைப்படங்களின் ப்ரோமோஷன்களுக்கு விஜய் உதவி வருகிறார். மார்க் ஆண்டனி, ஹிட் லிஸ்ட் ஆகிய படக்குழுவினர்கள், விஜய்யை நேரில் சந்தித்து, படத்தை ப்ரோமோஷன் செய்தனர். மேலும், பிரஷாந்தின் அந்தகன் படத்திலிருந்து ஒரு பாடலையும் விஜய் வெளியிட்டு இருந்தார்.
அலங்கு படக்குழுவினருடன் விஜய்
அந்த வகையில் தற்போது, அலங்கு படக்குழுவினரும் விஜய்யை அவருடைய வீட்டிற்கே சென்று சந்தித்துள்ளனர். அரசியல்வாதி அன்புமணி ராமதாஸின் மகளான சங்கமித்ரா தான், அலங்கு படத்தின் தயாரிப்பாளர் ஆவார்.
முதலில் இப்படத்திற்கான ப்ரோமோஷனுக்காக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை படக்குழுவினர் சந்தித்த நிலையில், தற்போது தளபதி விஜய்யை சந்தித்துள்ளனர். படத்தின் ட்ரைலரை பார்த்துவிட்டு, அனைவரும் பாராட்டியுள்ளார் விஜய். சந்திப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளிவந்துள்ளது.
இதோ அந்த வீடியோ..
WHAT A MOMENTOUS OCCASION ❤️🔥
Team #Alangu meets THE THALAPATHY 💥#Alangufromdec27th ❤️🔥
➡️ https://t.co/kqYp9sZdPD@DirSPShakthivel @GUNANIDHI_DG @kaaliactor #Sarathappani @ajesh_ashok #Chembanvinod @D_Sabareesh_ @SangamAnbu @DGfilmCompany @SakthiFilmFctry pic.twitter.com/zLsrkIDGQF
— Sony Music South India (@SonyMusicSouth) December 25, 2024