இரவில் தூக்கம் வராமல் மிகவும் கஷ்டப்படுகின்றீர்களா? தூக்கம் என்பது நமது அன்றாட தேவையில் மிக முக்கியமான ஒரு விடயமாகும்.
நமது வாழ்கையில் முக்கிய பங்கு வகிக்கும் அந்த தூக்கத்தை சரியாக பெற முடியாமல் பலர் தவிக்கின்றனர்.
நல்ல தூக்கத்தை பெற விரும்பினால் இந்த 3 வழிமுறைகளை மாத்திரம் பின்பற்றி பாருங்கள்.
தியானம் செய்தல்
மனதை அலைமோதவிடாமல் 15 நிமிடம் கண்களை மூடி சுவாசத்தை உள்ளீர்த்து வெளிவிடுங்கள்.
இவ்வாறு தினமும் செய்வதனால் மனம் அமைதியடைவதுடன், நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
மொபைல், தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்கவும்
தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே தொலைக்காட்சி, லேப்டாப் மற்றும் மொபைல் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள்.
இந்த சாதனங்களின் திரைகளிலிருந்து வெளிவரும் நீல நிற வெளிச்சம் நம்முடைய உடலில் உள்ள மெலடோனின் என்ற தூக்கத்தை வரவழைக்கும் ஹார்மோன் உற்பத்தியை குறைக்கிறது.
எனவே நீங்கள் தூங்க செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் மொபைல் மற்றும் தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்கவும்.
உணவில் கவனம் செலுத்தவும்
இரவு நேரம் குறைவாக சாப்பிடுங்கள். சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட கார்போஹைடரேட்ஸ், நிறைவுற்ற கொழுப்புகள், கஃபைன் போன்ற உணவுகளை இரவு நேரத்தில் எடுத்துக்கொள்ளாதீர்கள்.
தூங்கச் செல்வதற்கு முன் பால் அல்லது வாழைப்பழம் சாப்பிடுவதால் நல்ல தூக்கம் வரும்.