பெண்களுக்கு தன்னை அழகாக வைத்துகொள்வது என்பது மிகவும் பிடித்தமான ஒரு விடயமாக எப்போதும் காணப்படும்.
இதில் முகத்தை வென்மையாக்குவது என்பது அதில் பிரதான விடயமாக காணப்படுகின்ற நிலையில், அதற்காக பலதரப்பட்ட விடயங்களை அவர்கள் மேற்கொள்வதுண்டு.
இந்தநிலையில், இவ்வாறான கடினமான விடயங்கள் அல்லாமல் இலகுவாக முகத்தை வென்மையாக்க பயன்படுத்தும் சீரம் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
1. மஞ்சள் சீரம்
- முதலில் தேங்காய் எண்ணெயை எடுத்து அதில் மஞ்சள் தூளைச் சேர்த்து கலந்து ஒரு கொள்கலனுக்கு மாற்ற வேண்டும்.
- பின் சருமத்தில் 15 நிமிடங்கள் வைத்து பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.
2. எலுமிச்சை சீரம்
- சம அளவு எலுமிச்சை சாறை ரோஸ் வாட்டருடன் சேர்த்து இதனுடன் சில துளிகள் வைட்டமின் ஈ எண்ணெயைச் சேர்க்கவும்.
-
இதை கண்ணாடி பாட்டிலில் சேமித்து இரவு படுக்கைக்கு முன் கண் பகுதியைத் தவிர்த்து மற்ற இடங்களில் தடவலாம்.
3. கற்றாழை சீரம்
- கற்றாழை ஜெல்லை மென்மையாகும் வரை நன்கு கலந்து பாதாம் எண்ணெயை சில துளிகளைச் சேர்க்கலாம்.
- இந்த சீரத்தைக் கண்ணாடி கொள்கலனில் மாற்றி குளிர்ச்சிக்காக குளிர்சாதப் பெட்டியில் சேமிக்க வேண்டும். சருமத்தில் தினமும் பயன்படுத்தலாம்.