முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேசபந்து தென்னகோனை பதவி நீக்குவது எவ்வாறு..! வெளியானது முன்மொழிவு

காவல்துறை மா அதிபரை பதவியில் இருந்து நீக்கும் செயல்பாட்டில் தொடர்புடைய முன்மொழிவை பரிசீலிக்க ஒரு விசாரணைக் குழு நியமிக்கப்பட வேண்டும் என்று
மனித உரிமை ஆர்வலரும் பேராசிரியரும் சட்டத்தரணியுமான பிரதிபா மஹாநாமஹேவா(Prathibha Mahanamahewa) தெரிவித்துள்ளார்.

பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன்(deshabandu tennakoon) விளக்கமறியலில் இருக்கும்போது அவரை பதவியில் இருந்து நீக்கும் செயல்முறை எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை விளக்கி அவர் இவ்வாறு கூறினார்.

 ஒரு விசாரணைக் குழு நியமிக்கப்படவேண்டும்

“காவல்துறை மா அதிபரைபதவி நீக்குவதற்கான தீர்மானம் கொண்டு வரப்படும்போது ஒரு விசாரணைக் குழு நியமிக்கப்படவேண்டும். இந்தக் குழுவில் முதன்மையாக ஒரு பதவியில் இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி, காவல் ஆணையத்தின் தலைவர் மற்றும் ஒரு மூத்த நிர்வாக அதிகாரி ஆகியோர் அடங்குவர். இந்த மூவரும் பிரேரணையில் உள்ள அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு ஒரு பரிந்துரையை வழங்குவர். அந்தப் பரிந்துரை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். நாடாளுமன்றத்தில் பாதிக்கும் மேற்பட்ட உறுப்பினர்களால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே காவல்துறை மா அதிபரைபதவி நீக்க முடியும்.” என அவர் தெரிவித்தார்.

தேசபந்து தென்னகோனை பதவி நீக்குவது எவ்வாறு..! வெளியானது முன்மொழிவு | Explains How An Igp Can Be Removed From Office

சஜித் பிரேமதாசவின் அறிவிப்பு

இதேவேளை இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஜி.பி தேசபந்து தென்னகோனை, தடுப்புக் காவலில் இருக்கும் போது பதவியில் இருந்து நீக்குவதற்கான முன்மொழிவை தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குழு இன்று (25)சபாநாயகரிடம் சமர்ப்பித்தது.இதில் 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

தேசபந்து தென்னகோனை பதவி நீக்குவது எவ்வாறு..! வெளியானது முன்மொழிவு | Explains How An Igp Can Be Removed From Office

இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும்(sajith premadasa) இன்று இந்த முன்மொழிவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தனது முழு ஆதரவையும் வழங்கும் என்று தெரிவித்தார்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.