முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொதுமுடக்கம் குறித்து வடக்கு – கிழக்கு மக்களிடம் கோரிக்கை

எதிர்வரும் திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள பொதுமுடக்கத்திற்கு வடகிழக்கு
மக்கள் பூரண ஆதரவினை வழங்க வேண்டும் என்று முன்னாள் வடக்கு மாகாண சபை
உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்றையதினம் (15.08.2025) ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள ஊடக
குறிப்பில் தெரிவித்துள்ளார். 

அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “போர் முடிவுற்று 16 வருடங்கள் கடந்த போதும் வடகிழக்கில் இராணுவ முகாம்கள்
அகற்றப்படவில்லை. அவர்களின் பிரசன்னமும் குறைக்கப்படவில்லை. மாறாக
பொதுமக்களின் காணிகளை கபளீகரம் செய்த அவர்கள் அங்கு நிலையான இராணுவ
கட்டுமானங்களை அமைத்தனர்.

 இராணுவ முகாம்கள்

அந்தகாலம் தொட்டு தமிழ் மக்களின் அன்றாட வாழ்வில் இராணுவத்தின் தலையீடனாது
பல்வேறு பாதிப்புக்களை மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்தியிருக்கின்றது. அவ்வாறான
ஒரு சம்பவமே கடந்தவாரம் முல்லைத்தீவு முத்தையன் கட்டுபகுதியிலும்
இடம்பெற்றுள்ளது.

பொதுமுடக்கம் குறித்து வடக்கு - கிழக்கு மக்களிடம் கோரிக்கை | Public Strike North East People Request

தமிழர் தாயக பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றி மக்களின் சுதந்திரமான
வாழ்வுரிமையை உறுதிப்படுத்த வேண்டிய நிலைமையை ஆட்சிக்கு வந்த பேரினவாத அரசுகள்
சிறிதளவேனும் செய்யவில்லை.

தொடர்ச்சியாக அதிகார வர்க்கமானது தமிழ் மக்களை அடிமை மனோநிலையில் நடாத்துகின்ற
இந்த நிலைக்கு வடக்கு – கிழக்கு மக்கள் தமது பூரண எதிர்ப்பை காட்ட வேண்டிய நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளோம்.

அந்த வகையில் தமிழர் தாயக பகுதிகளில் இடம்பெறும் அதிகார வர்க்கத்தின்
எதேச்சி அதிகாரப்போக்கிற்கு எதிராக எதிர்வரும் (18)
அனுஸ்டிக்கப்படவுள்ள பொதுமுடக்கத்திற்கு வடகிழக்கு தமிழ்மக்கள், தங்களது பூரண
ஒத்துழைப்பை நல்கி சர்வதேச சமூகத்திற்கும், அரசுக்கும் எமது நிலைப்பாட்டை
உறுதிபட வெளிப்படுத்த வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.