முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தொடர்பான வழக்கில், விசாரணை செய்யும் குற்றப் புலனாய்வுத் துறைக்குழு, சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் தனது
மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள, 16.6 மில்லியன் ரூபாய் அரச
நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
ஷானி அபேசேகர அழைப்பு
இந்நிலையில், இது தொடர்பில் விசாரணை செய்யும் இந்தக்குழு நாளை, சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு
அழைக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவிலிருந்து திரும்பிய இந்தக் குழுவுடனான கலந்துரையாடல், வழக்கின்
முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதையும் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவதையும்
நோக்கமாகக் கொண்டுள்ளது என்று சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குற்றப்புலனாய்வுத்துறை பணிப்பாளர் ஷானி அபேசேகர இந்தக் கூட்டத்தை
ஒருங்கிணைத்துள்ளார்.
அவர்கள் மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் மூத்த அரச
சட்டத்தரணி சமதாரி பியசேன ஆகியோரைச் சந்திப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

