திவ்ய பாரதி
இந்திய சினிமாவில் இதுவரை யாராலும் செய்யமுடியாத ஒரு சாதனையை பல ஆண்டுகளுக்கு முன்பே நடிகை ஒருவர் செய்துள்ளார். ஒரே வருடத்தில் இவர் நடித்த 12 திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது.
இன்றும் இந்த சாதனையை வேறு எந்த நடிகையாலும் முறியடிக்க முடியவில்லை. இந்த மிகப்பெரிய சாதனையை படைத்த நடிகை வேறு யாருமில்லை, நடிகை திவ்ய பாரதி தான். பாலிவுட் சினிமாவில் 12 வயதில் அறிமுகமானார்.
ஓடாது.. நயன்தாரா படத்திற்கு சாபம் கொடுத்த நடிகர் எஸ்.வி.சேகர்! என்ன பிரச்சனை?
பின் மாடலிங் துறையிலும் நுழைந்தார். 14 வயதில் மாடலிங் உலகில் எண்ட்ரி கொடுத்த நடிகை திவ்ய பாரதி, இயக்குநரும் தயாரிப்பாளருமான சஜித் நதியத்வாலாவை திருமணம் செய்துகொண்டார்.
1990ம் ஆண்டு இவர் தமிழில் வெளிவந்த நிலா பெண்ணே படத்தில் நடித்திருந்தார். பின் தெலுங்கில் பாபிலி ராஜா என்கிற படத்தில் நடித்தார். அதோடு பாலிவுட் பக்கம் கவனம் செலுத்திய நடிகை திவ்ய பாரதி, தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தார்.
19வது வயதில் மரணம்
இதில் இன்றளவும் வேறு எந்த நடிகையாலும் முறியடிக்க முடியாத சாதனை என்றால், ஒரே வருடத்தில் திவ்ய பாரதி நடிப்பில் 12 படங்கள் வெளியானது தான். இத்தகைய மாபெரும் சாதனையை படைத்த நடிகை திவ்ய பாரதி தனது 19வது வயதில் மரணமடைந்தார்.
1993ம் ஆண்டு தனது வீட்டின் பால்கனியில் இருந்து கீழே விழுந்து இறந்ததாக சொல்லப்படுகிறது. ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வந்த திவ்ய பாரதியின் மரணம், ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது.
இவர் இறந்து 32 வருடங்கள் ஆகியிருந்தாலும் கூட, இவருடைய மரணத்தை அவரது ரசிகர்கள் யாரும் மறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.