கொழும்பு, கொள்ளுப்பிட்டி, ஆர். ஏ. டி மெல் மாவத்தையின், விடுதி ஒன்றில்,
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று
வெளிநாட்டினரில் ஒருவரான 27 வயது ஜெர்மன் பெண்ணும் காலமானார்.
அதே விடுதியைச் சேர்ந்த 24 வயது பிரித்தானிய பெண் ஒருவர் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த மரணமும்
நிகழ்ந்துள்ளது.
விசாரணைகள்
முன்னதாக, நச்சு வாயுவை உள்ளிழுத்ததால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்று
பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
எனினும், விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.