முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தினமும் மாதுளம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா…..

சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்றாக பழங்கள் காணப்படுகின்றன. பழங்களை உண்பதால் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியம் கிடைக்கின்றது.

ஒவ்வொரு பழங்களும் வெவ்வேறு சுவையையும் நன்மைகளையும் கொண்டுள்ளன. அந்த வகையில் மாதுளம் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மாதுளம் பழ விதைகள் நம் தோல்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளைக் குணமாக்கும் சக்திகொண்டவை.

உடல் எடை குறையும்

மாதுளம்பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும். தலையில் இரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டும். இதில் இருக்கும் விட்டமின் மற்றும் கனிமங்கள் முடியைப் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகின்றன.

தினமும் மாதுளம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா..... | Benefits Of Eating Pomegranate Fruit Every Day

தினமும் மாதுளம் சாப்பிட்டால், மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் சக்திகளை அதிகரித்து, மூளையைச் சுறுசுறுப்பாக்கும்; ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும். அத்துடன் அல்சைமர் மற்றும் மூளைக் கட்டிகள் வராமல் தடுத்து பாதுகாக்கும்.

கர்ப்பிணிப் பெண்கள், தினமும் மாதுளம்பழச் சாறு குடித்துவர, குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக வளர துணைபுரியும். ஹோர்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும்.

மாதுளை, வயிற்றில் குவிந்துள்ள தேவையற்றக் கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையது. செரிமானப் பிரச்சினைகளைச் சீராக்கி, உடல் எடை குறைவதற்கும், 2 ஆம் வகை சர்க்கரைநோயைக் குறைப்பதற்கும் துணைபுரியும்.

பலமான இதயம்

மெனோபாஸ் காலங்களில் ஈஸ்ட்ரோஜென்னின் உற்பத்தி குறைந்து, மூட்டுவலி மற்றும் எலும்புத் தேய்மானம் அதிகரிக்கும். இது போன்ற காலங்களில் பெண்கள் தினமும் மாதுளம்பழ ஜூஸ் குடிக்கலாம். அது, உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியைத் தூண்டுவதுடன் எலும்புகள் வலுப்பெற உதவும்.

தினமும் மாதுளம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா..... | Benefits Of Eating Pomegranate Fruit Every Day

மாதுளம்பழத்தை உண்பதால், ஈறுகள் மற்றும் பற்களில் மறைந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அழிகின்றன.

தினமும் 100 மில்லிலீற்றர் மாதுளம்பழச் சாற்றை பருகிவந்தால், குருதி நாளங்கள் தளர்வடைந்து, அதிக அளவில் ஒட்சிசனைக்கொண்ட இரத்தம் இதயத்துக்குச் சென்று, இதயம் பலம் பெறும்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.