கட்டுப்பாடில்லாத உணவு பழக்கவழக்கம் மற்றும் உடற் பயிற்சி இல்லாத காரணமாக உடலில் எடை அதிகரிக்கின்றது.
இந்த எடையை குறைக்க பல வழிகளில் பல முயற்சிகள் எடுத்துக்கொண்டாலும் ஆரோக்கியமான வழிமுறை மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
இதனடிப்படையில், உடல் எடையை ஒரே வாரத்தில் குறைக்க சிறந்த வழி குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
தொங்கும் தொப்பை
தேவையான பொருட்கள்,
- கொள்ளு – 1 கப்
- கருப்பு உளுந்து – ½ கப்
- வேர்க்கடலை – 4 ஸ்பூன்
- எள்ளு- 2 ஸ்பூன்
- வெல்லம் – 3
- ஏலக்காய்- 2
- நெய் – 2 ஸ்பூன்
செய்முறை
- முதலில் கொள்ளை கடாயில் போட்டு நன்றாக வாசம் வரும் வரை சிவக்க வறுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
- பின் அதே கடாயில் கருப்பு உளுந்தை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
- அடுத்து வேர்க்கடலை, எள் மற்றும் ஏலக்காயை வறுத்துக் கொள்ளுங்கள்.
- வறுத்த அனைத்துப் பொருட்களையும் ஆற வைத்து மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ளுங்கள்.
- அரைத்து வைத்த பொடியுடன் நன்றாக பொடி செய்யப்பட்ட வெல்லத்தை போட்டு நெய் ஊற்றி நன்றாக பிசைந்துக்கொள்ளவும்.
- பின் இதனை சிறிய சிறிய உருண்டையாக உருட்டி லட்டு பிடித்துக்கொள்ளுங்கள்.
- இதன் மூலம் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கலாம்.