முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பத்து முன்னாள் அமைச்சர்கள் உட்பட எம்பிக்கள் சிக்கினர்! நெருங்கியது சிஐடி

பத்து முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபர்கள், மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்தை மூடிமறைக்க மதுபான நிறுவனம் ஒன்றிடமிருந்து மில்லியன் கணக்கான பணம் உட்பட பல்வேறு சலுகைகளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

அத்தோடு, சந்தேகநபர்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட பல எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய சுற்று விசாரணை

ஆரம்பத்தில் சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய வங்கி பிணைமுறி மோசடியை கடுமையாக விமர்சித்திருந்ததாகவும், சந்தேகத்துக்குரிய மதுபான நிறுவனத்திடமிருந்து பணம் உட்பட பல்வேறு சலுகைகளைப் பெற்ற பிறகு, அவர்கள் விமர்சிப்பதை நிறுத்திவிட்டு அமைதியை கடைபிடித்ததாகவும் குற்றப் புலனாய்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பத்து முன்னாள் அமைச்சர்கள் உட்பட எம்பிக்கள் சிக்கினர்! நெருங்கியது சிஐடி | Bank Robbery Case Cid Probe 10 Mps

இவ்வாறானதொரு பின்னணியில், குற்றப் புலனாய்வு திணைக்களம் மதுபான நிறுவனத்தால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பல காசோலைகளைக் கண்டறிந்துள்ள நிலையில் அது தொடர்பான விசாரணைகள் சமீபத்தில் ஒரு புதிய சுற்றில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அறியபப்படுகிறது.

ஆரம்ப விசாரணைகள்

இதேவேளை, மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான ஆரம்ப விசாரணைகள் சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஷானி அபேசேகரவால் நடத்தப்பட்டன.

பத்து முன்னாள் அமைச்சர்கள் உட்பட எம்பிக்கள் சிக்கினர்! நெருங்கியது சிஐடி | Bank Robbery Case Cid Probe 10 Mps

பின்னர் அவர் நீக்கப்பட்ட பிறகு, விசாரணைகள் முடங்கிய நிலையில், அபேசேகர சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

you may like this

https://www.youtube.com/embed/RZqYXV19gXg

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்