கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து வருகை தந்த மட்டக்களப்பை சேர்ந்த 34 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் அழகுசாதன பொருட்களை கடத்த முயன்றதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அழகுசாதனப் பொருட்கள்
அவரின் பயண பொதிகளில் மேற்கொண்ட பரிசோதனையின் போது ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியான அழகுசாதனப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர் வர்த்தக நோக்கத்தின் அடிப்படையில் அடிக்கடி இந்தியா சென்று வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்கப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.