முகத்தில் பல்வேறு காரணங்களால் கரும்புள்ளிகள் தோன்றி, முகத்தை பொலிவு இல்லாமல் ஆக்குகிறது. ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி அனைவரது முகத்திலும் கரும்புள்ளி மற்றும் கருந்திட்டுக்கள் அடிக்கடி ஏற்படும்.
இது உடலின் குறிப்பிட்ட பகுதியில் மெலனின் சுரப்பியை அதிகரித்துவிடுவதனால் சருமத்தில் குறிப்பிட்ட பகுதியில் கருப்புத்திட்டுக்கள் தோன்றும்.
இதனால் பெரும்பாலானோர் மனஉளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். இந்த பிரச்சினைக்கு வீட்டில் இருக்கும் எளிய பொருட்களைக் கொண்டு தீர்வு காணலாம்.
கொத்தமல்லி இதற்கு உதவுகின்றது. கொத்தமல்லியை ஒரு சில பொருட்களுடன் கலந்து போடுவது இன்னும் சிறப்பான பலன்களை தரும். அந்தவகையில் இதனை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
முதலாவது முறை
2 கரண்டி கொத்தமல்லி சாறெடுத்து அதனுடன் 1 கரண்டி எலுமிச்சை சாறைக் கலந்து முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
வாரத்தில் இதை இரண்டு முறை செய்து வரலாம்.
இரண்டாவது முறை
கொத்தமல்லி இலையின் சாறுடன் சிறிது கற்றாழை ஜெல்லும் அதனுடன் தயிரும் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் பூச வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து நன்கு வட்ட வடிவில் மசாஜ் செய்யுங்கள். பின்பும் முகத்தை வெதுவெதுப்பான நீரினால் மாற்றம் வரும்.
மூன்றாவது முறை
1 கப் கொத்தமல்லி இலைகளை தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்துச் சாறு பிழிந்து கொள்ளுங்கள். அடுத்து அதில் 1 கரண்டி எலுமிச்சை சாறும், 1 கரண்டி கற்றாழை ஜெல், 1 கரண்டி ரோஸ் வோட்டர் ஆகியவற்றைக் கலந்து முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் வரை உலர விடுங்கள்.
பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள். முதல் முறை பயன்படுத்தியதுமே நல்ல வித்தியாசத்தை உங்களால் உணர முடியும்.