அழகிய நீளமான கூந்தல் என்பது அணத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.
ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவே உள்ளது.
இந்தநிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப்பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 2 கப்
- கறிவேப்பிலை- 1 கைப்பிடி
பயன்படுத்தும் முறை
- முதலில் கறிவேப்பிலை சுத்தம் செய்து நிழலில் உலர வைத்து எடுத்துக்கொள்ளவும்.
-
இதையடுத்து ஒரு இரும்பு கடாயில் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி மிதமான தீயில் வைத்து காய்ச்சிக் கொள்ளவும்.
- பின் தேங்காய் எண்ணெய் லேசாக சூடானதும் அதில் கறிவேப்பிலை இலைகளை மிக்ஸியில் பொடியாக அரைத்து சேர்த்து நன்கு காய்ச்சவும்.
- எண்ணெய் நன்கு சூடு ஆறிய பின்னதாக ஒரு டப்பாவில் ஊற்றி வடிகட்டிக் கொள்ளவும்.
-
இதை தொடர்ந்து தலைமுடிக்கு பயன்படுத்தி வர தலைமுடி நன்கு வளரும்.