அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.
ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவே உள்ளது.
இந்தநிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை பெறுவதற்கு கடுகு எண்ணெய் பயன்பாடும் சிறந்த தீர்வாகும்.
கடுகு எண்ணெய்
இந்தநிலையில், கடுகு எண்ணெயை சம பாகங்களில் தேங்காய் எண்ணெயுடன் கலந்து கலந்து தடவவும்.
இந்த எண்ணெய்களை சிறிது சூடாக்கி உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்யவும்.
இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு மறுநாள் கழுவும் போது இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
அத்தோடு, கற்றாழை ஜெல்லுடன் கடுகு எண்ணெயை கலந்து முடியின் முனைகளில் தடவவும்.
கழுவுவதற்கு முன் 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும், இந்த கலவை பிளவு முனைகளைத் தடுத்து முடியை மென்மையாக்கும்.