யாழில் (Jaffna) இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி இருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (14) யாழ், செம்மணி சந்தியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மோட்டார் சைக்கிளும் பட்டா ரக வாகனமும் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இருவர் படுகாயம்
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இதையடுத்து, காயமடைந்த இருவரும் யாழ் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து சம்பவம் குறித்து விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



