கிளிநொச்சி (Kilinochchi) – பெரிய குளத்தில் காணாமல் போயிருந்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் சடலம் இன்று (29.01.2025) மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
சடலமாக மீட்கப்பட்ட நபர், பெரியகுளத்தில் இன்றையதினம் ஆலயத்தின்
தீர்த்தோற்சவ நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது அப்பகுதிக்கு வந்தவர் ஒருவர் குளத்தில் பாய்ந்துள்ளார்.

இந்நிலையில், அவர் பலமணி நேரம் வெளியில் வராத காரணத்தினால் அப்பகுதி இளைஞர்கள் காணாமல் போனவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்த குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



