யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள மனித புதைகுழிகளில் இருந்து இன்றைய தினம் புதிதாக 03 எலும்புக் கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
26 ஆவது நாள் அகழ்வுப் பணிகள்
செம்மணி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் 26 ஆவது நாள் அகழ்வுப் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 03 எலும்புக் கூட்டு தொகுதியுடனுமாக மொத்தம் 105 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 118 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











