இலங்கையில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்,
தொற்றுநோயியல் பிரிவு விழிப்புடன் இருப்பதாக, சுகாதார அமைச்சர் நளிந்த
ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
சிக்குன்குனியா பரவலை எதிர்கொள்ள சில மருத்துவமனைகளில் வசதிகளை அதிகரிக்கவும்
கூடுதல் ஊழியர்களை நியமிக்கவும் சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக
அவர் கூறியுள்ளார்.
இரத்தினபுரி மருத்துவமனையின் சில ஊழியர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, மருத்துவமனைக்கு கூடுதல் ஊழியர்களை நியமிக்க சுகாதார சேவைகள்
இயக்குநர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜெயதிஸ்ஸ கூறியுள்ளார்.
முன்கூட்டிய நடவடிக்கை
இதற்கிடையில், காய்ச்சல் மற்றும் மூட்டு வலி ஏற்பட்டால், முன்கூட்டியே
மருத்துவ உதவியை நாடுமாறு, தொற்றுநோயியல் பிரிவு அதன் வலைத்தளத்தில்
அறிவுறுத்துகிறது.
அத்துடன், நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றுதல், நுளம்பு விரட்டிகளைப்
பயன்படுத்துதல், நீண்ட கை ஆடைகளை அணிதல், ஜன்னல்கள் மற்றும் கதவுகளைத்
திரையிடுதல்.
காய்ச்சல் மற்றும் மூட்டு வலி ஏற்பட்டால், தகுந்த சிகிச்சையைப்
பெற, பொதுமக்கள் முன்கூட்டியே மருத்துவ உதவியை நாடுமாறு, பொது மக்கள்
அறிவுறுத்தப்படுகிறார்கள்.