அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் வேகமாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த தகவலை, பூச்சியியல் ஆய்வு அதிகாரிகள் சங்கம் (The Government Health Entomology Officers’ Association) தெரிவித்துள்ளது.
விசேட நடவடிக்கை
அதன்படி, கடுமையான அபாயங்கள் உள்ளதாக இனங்காணப்பட்ட பகுதிகளில் விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பூச்சியியல் ஆய்வு அதிகாரிகள் சங்க தலைவர் நஜித் சுமனசேன (Najith Sumanasena) கூறியுள்ளார்.
டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த இவ்வாறான அபாயகர நிலைமைகள் உள்ள பகுதிகளில் சுமார் 60 க்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பூச்சியியல் ஆய்வு அதிகாரிகள் சங்க தலைவர் நஜித் சுமனசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.